நாடாளுமன்றத்தில் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் நேற்று மௌன அஞ்சலி செலுத்தினர். அத்துடன், அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மேலவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1984 - 89ல் மேலவை உறுப்பினராக இருந்துள்ளார். மேலவையில் பேசிய தலைவர் ஹமீது அன்சாரி: "ஜெயலலிதாவின் மறைவால் நாடு மிகவும் முக்கியமான தலை வரை, மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்ந்த நிர்வாகியை இழந்துள்ளது.

மக்களால் விரும்பப்படும் தலைவரான அவர் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் நிற்கும். அவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்பட உலகுக்கும் மிகப்பெரிய சேவையை செய் துள்ளார். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை மேலவை சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!