‘பணிவு’ செல்வம்

தமிழக முதலமைச்சர் பேச்சிமுத்து... இப்படிச் சொன்னால் யார் என்றுதானே கேட்கத்தோன்றும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் (‘ஓபிஎஸ்’ என அழைக்கப்படுகிற) ஓ.பன்னீர் செல்வம் தான் அவர். 1951ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த அவருக்கு, அவரது தந்தை ஓட்டக்காரத் தேவர் வைத்த பெயர் பேச்சிமுத்து. குலதெய்வமான பேச்சியம்மன் நினைவாக வைக்கப்பட்ட பெயர் அது. பின்னர் அந்தப் பெயர் பன்னீர்செல்வம் என்று மாற்றப்பட்டது. ஓட்டக்காரத்தேவர்= பழனியம் மாள் தம்பதிக்குப் பிறந்த பன்னீர்செல்வத்தின் குடும்பம் பெரியது. அவருக்கு நான்கு சகோ தரர்கள், நான்கு சகோதரிகள்.

பெரியகுளத்தில் பள்ளிப் படிப்பு படித்த ஓபிஎஸ், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தார். பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் சிறி தளவு வயல், தோட்டம் தவிர சொல்லிக்கொள் ளும் வகையில் பெரிய வசதிகள் ஓபிஎஸ் குடும் பத்திடம் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதே தமது அப்பாவுக்குத் துணையாக ‘ஃபைனான்ஸ்’ கொடுத்து வாங்கும் வேலையிலும் ஈடுபட்டார். முதலில் பெரியகுளம் சந்தையில் வட்டிக்குக் கொடுத்து வாங்கிய அவரது குடும்பம் அடுத்து லாரிகளுக்கு ‘ஃபைனான்ஸ்’ வழங்கும் தொழி லிலும் கால் பதித்தது. பி.ஏ. பட்டப்படிப்புப் படித்தாலும் பிழைப்பிற்காக பால் பண்ணை நடத்தினார் ஓபிஎஸ். பின்னர், தமது நண்பருடன் சேர்ந்து பெரிய குளத்தில் டீக்கடை ஒன்றை அவர் ஆரம்பித் தார். இந்தக்கடையே இவருக்கு வாழ்வாதார மாக இருந்தது. அதிமுக அனுதாபியாக அவ் வப்போது கட்சிக்கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தார். 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபிறகு ஜெயலலிதா- ஜானகி என அதிமுக இரண்டாக உடைந்தது.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடியிடம் தேம்பித் தேம்பி அழுதார் ஓபிஎஸ். அவரைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார் மோடி. படம்: தமிழக ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!