டெல்லியில் பனிமூட்டத்தால் விமானம், ரயில் தாமதம்

புதுடெல்லி: டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் இருந்து வருகிறது. அதனால் ரயில், விமான சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நேற்று கடுமையான பனிப் பொழிவு நிலவியது. அதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ரயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. கடும் பனியால் சாலை போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் எதுவும் தெரியவில்லை. அதனால் விமான சேவையில் பாதிப்பு நிலவியது. 6 அனைத்துலக விமானங்களும் 7 உள்ளூர் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. ஒரு உள்ளூர் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல ரயில் போக்குவரத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. கடும் பனி மூட்டத்தால் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக வந்தன என்று வடக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெல்லியில் 94 ரயில்கள் தாமதமாக வந்தன. 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 16 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. அதேபோல லக்னோ, அமிர்தசரசிலும் பனி மூட்டத்தால் பாதிப்பு நிலவியது. இந்தப் பனி மூட்டம் மேலும் 2 முதல் 3 தினங்களுக்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!