அதிமுகவை உடைக்க தீவிரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியல் மிகுந்த பரபரப்புக்கு ஆளாகி வருகிறது. ஆட்சியை யும் கட்சியையும் தமது கைப்பிடிக்குள் வைத்திருந்த ஜெயலலிதா இல்லாத நிலை யில் அவ்விரண்டிலும் குழப்பத்தை ஏற் படுத்தும் முயற்சிகள் நடப்பதாகத் தகவல் கள் கிளம்பி உள்ளன. குறிப்பாக, ஆளும் கட்சியான அதிமுகவை இரண்டாக உடைப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தைத் தன் வசப்படுத்த ஒரு தேசிய கட்சி முயன்று வருவதாக தமிழக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன் ஒரு முயற்சியாக போயஸ் தோட் டத்து பிரபலமாக விளங்கியவரும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்கு நெருக்கமானவருமான சேகர் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட சென்னையின் எட்டு இடங்களில் வருமான வரித்துறை நேற்று முன்தினம் சோதனையைத் தொடங் கியது. நேற்றும் அது தொடர்ந்தது. சேகர் ரெட்டியின் சென்னை வீடு மட்டுமல்லாது வேலூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் சென்னை தியாக ராயர் நகர், அபிபுல்லா சாலை உள்ளிட்ட இடங் களில் சுமார் 170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் ஆகியன கைப்பற்றப்பட்ட வேளையில் நேற்றைய சோதனையிலும் பல கோடி பெறுமான பணம், ரொக்கம் கைப் பற்றப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு திருப்பதிக்குச் சென்றிருந்தபோது அவருக்கு அங்கு தேவையான உதவிகளைச் செய்தவர் சேகர் ரெட்டி (வலம்). கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!