பாபாவுக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் வழிபாடு

கவுந்தப்பாடி: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நகரின் மையப் பகுதியில் உள்ள பழனிச்சாமி வீதி விநாயகர் கோவில் வளாகத் தில் சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை, விசே ஷ தினங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள ஆண்கள், பெண்கள் அதிக அளவில் வழிபாடுகளில் கலந்து கொள்கிறார்கள். தற்போது பழைய 1,000, 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் "அனைவரும் விரைவில் இந்த பணப் பிரச்சினையில் இருந்து மீண்டு வரவேண்டும்," என்று சாய்பாபாவுக்குப் பழைய, புதிய ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாபாவின் பக்திப் பாடல்களைப் பாடி வேண்டிக்கொண்டனர்.

அனைவரும் விரைவில் பணப் பிரச்சினையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று சாய்பாபாவுக்கு பழைய, புதிய ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!