இந்திய விமான நிலையங்களில் பயணிகள் கொண்டு செல்லும் கைப்பைகளில் சிறிய சீட்டை இணைத்து, அந்தப் பைகளைப் பரிசோதித்ததற்கு அடையாளமாக அதில் பாதுகாப்பு முத்திரையிடப் படும் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், டெல்லி, மும்பை, சென்னை, கோல்கத்தா, ஹைதரா பாத், பெங்களூரு, அகமதாபாத் என ஏழு விமான நிலையங்களில் சோதனை முயற்சியாக அந்த நடை முறை நீக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து,
அந்த விமான நிலை யங்கள் வழியாகப் பயணம் செய் வோர் இனிமேல் தங்கள் கைப்பை களில் அப்படியொரு சீட்டை இணைத்து, பாதுகாப்பு முத்திரை பெறத் தேவையில்லை. விமான நிலையங்களில் பாது காப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) முடிவையடுத்து இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் தொடர்பில் பல ஆண்டு களாக விமானப் போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. "1992 முதல் 'போர்டிங் பாஸ்' களிலும் 'பேக்கேஜ் டேக்'களிலும் பாதுகாப்பு முத்திரையிடும் நடை முறை இருந்து வருகிறது.