பட்டம் விடுவதற்குப் பயன்படும் மாஞ்சா நூலுக்குத் தடை

புதுடெல்லி: பட்டம் பறக்கப் பயன்படுத்தப் படுவதற்கு கண்ணாடிப் பசை பூச்சுடன் ஆன நைலான் அல்லது செயற்கைப் பருத்தி நூலைப் பயன்படுத்த நாடு முழுதும் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 'மாஞ்சா' நூல் என்றழைக்கப்படும் இவ்வகை நூலில் பட்டம் பறக்கவிடும்போது அந்த நூல், சாலைகளில் செல்வோரது கழுத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பறவைகள், சாலைகளில் செல்லும் ஆடு, மாடுகளும் இந்த நூலால் பலியாகியுள்ளன.

எனவே "மாஞ்சா நூலுக்குத் தடை விதிக்கவேண்டும்," என்று கோரி விலங்குகள் நல அமைப்பான "பீட்டா" தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை, பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று முன்தினம் நடந்தது. அப்போது 'மாஞ்சா' நூல் கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!