புதுடெல்லி: மலேசியாவின் கோலாலம்பூரில் 'எக்கனாமிக் டைம்ஸ் ஆசியன் பிஸினஸ் லீடர்ஸ் மாநாடு 2016' நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்த படியே காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி (படம்) பங்கேற்று உரையாற்றினார். "இந்தியப் பொருளியலில் குறிப் பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள் ளது. குறிப்பாக நாம் மின்னணு மற்றும் ரொக்கப் பணமில்லாப் பொருளியலை நோக்கி நகர்ந்து வருகிறோம். "இப்போது கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பதுதான் எனது முக்கிய பணியாக உள்ளது. மேலும் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் வாய்ப்புகளை உரு வாக் குவதற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க பல் வேறு பொருளியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"குறிப்பாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இதுதவிர, உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. "இதனால் உலகிலேயே 6வது பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. பாஜக பொறுப்பேற்ற பிறகு தொழில் தொடங்குவதை எளிமையாக்க கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.