கோவை உள்ளிட்ட சோலார் நகரங்களுக்கு ரூ.30 கோடி

புதுடெல்லி: சூரிய மின்சக்தி (சோலார்) நகரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கு மத்திய அரசு 30.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து கோவை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவை யில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், "இந்த ஆண்டு நவம்பர் 30 வரை யிலான கடந்த 3 ஆண்டுகளில் இத்தொகை அனுமதிக்கப்பட்டுள் ளது. அனுமதிக்கப்பட்ட 30.36 கோடியில் இதுவரை ரூ. 12.98 கோடி வழங்கப்பட்டுள்ளது.

"தமிழகத்தில் கோவை, கேர ளாவில் கொச்சி, கர்நாடகாவில் மைசூரு என நாடு முழுவதும் 60 நகரங்கள், சூரிய மின்சக்தி நகரங்கள் மேம்பாட்டுத் திட் டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. "ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் ஒரு நகரம் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு நகரத்துக்கும் ரூ.50 லட்சம் வரை மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. சம்பந் தப்பட்ட நகர நிர்வாகம் அல்லது மாநில அரசு சம அளவில் நிதி ஒதுக்கினால் மட்டுமே இத்திட்டத் தில் நிதி விடுவிக்கப்படும்," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!