புயலில் சிக்காமல் 10,000 பேரை காத்த செயற்கைக்கோள்கள்

சென்னை: வங்கக்கடலில் உரு வான வர்தா புயல் கடந்த திங் கட்கிழமை சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங் களை சின்னாபின்னமாக்கி விட்டு கரையைக் கடந்தது. இந்த மாவட்டங்களில் பெரும் பாலான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. மின்சாரக் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடும் புயலால் பாதிக்கப்படாமல் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் மீட்கப் பட்டதற்கு இஸ்ரோ ஏவிய 'இன் சாட் 3 டிஆர்' மற்றும் 'ஸ்காட் சேட்-1' செயற்கைக்கோள்கள் அளித்த தகவலே காரணம் என தெரிய வந்துள்ளது.

இந்த செயற்கைக்கோள்கள் புயல் நகர்ந்து சென்ற திசை குறித்து தகவல் அளித்தது. இதன் அடிப்படையில் அதி காரிகள் புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் வசித்த மக்களை மீட்டு, பத்திரமான இடங்களில் தங்கவைத்தனர். ஆந்திர கடற்கரைப் பகுதி யிலும் மக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பருவநிலையை கணிக்கும் நவீன செயற்கைக்கோளான 'இன்சாட் 3 டிஆர்' கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி ஏவப்பட்டது. 'ஸ்காட்சாட்-1' செயற்கைக் கோள் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி ஏவப்பட்டது. வர்தா புயல் காரணமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் சேதம் அடையும் எனக் கூறப்பட்டது. ஆனால், இஸ்ரோ அதிகாரி கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதம் தவிர்க்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!