‘சசிகலாவை எதிர்ப்பவர்கள் அதிமுக விசுவாசிகளல்ல’

சென்னை: சசிகலாவை எதிர்ப்பவர்கள் உண்மையான அதிமுக வினராக இருக்க முடியாது என அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயல லிதா காலமானதையடுத்து அதி முகவை உடைக்க பாஜக சதி செய்வதாக அவர் கூறினார். ஜெயலலிதா பேரவையின் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதுசூதனன், சசிகலாவை அனை வரும் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

"எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவுக்கு அவர் இறந்தபோது இப்போது இருப்பது போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா அதிமுகவை மீட் டெடுத்தார். "சிலர் பதவி வெறியோடு உள்ளார்கள். சின் னம்மா (சசிகலா)வுக்கு அந்த ஆசை இல்லை. நான்தான் முதலில் அவரைப் பொதுச்செயல ராகப் பதவி ஏற்கும்படி கேட்டுக் கொண்டேன். கருத்துவேறுபாடு களை மறந்துவிட்டு அதிமுக வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்," என்றார் மதுசூத னன். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்றும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அவர் களமிறங்க வேண்டும் என்றும் அக்கூட்டத் தில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!