விமான நிலையத்துக்குள் செல்ல கை ரேகை

விமான நிலையத்துக்குள் செல்ல கை ரேகை அடையாளத்தைப் பயன்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்திய விமானப் போக்கு வரத்து அமைச்சு ஹைதராபாத் விமான நிலையத்தில், கைரேகை அடையாளத்தைப் பயன்படுத்தி பயணிகளை அனுமதிக்கும் முன் னோடிச் சோதனை முறையில் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து விளக்கிய மூத்த அதிகாரி ஒருவர், "ஒரு பில்லிய னுக்கும் அதிகமான ஆதார் அட் டைகள் இதுவரையில் பதிவு செய் யப்பட்டுள்ளன. இவற்றைப் பதிவு செய்யும்போது கை ரேகைகள், கண்விழிப் படல பதிவு போன்றவை சேகரிக்கப்பட்டு தேசிய மின் னிலக்கப் பதிவகத்தில் சேமிக்கப் பட்டுள்ளன. அதனால் விமானச் சீட்டுகளைப் பதிவு செய்யும்போது ஆதார் அட்டை எண்களைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுவர்.

அவர்கள் விமான நிலையத்துக்குள் நுழையும்போது கை ரேகையைப் பதிவுசெய்து உள்ளே சென்று, உள்ளூர் விமான சேவைகளைப் பயன்படுத்தலாம். இதற்கான தொழில்நுட்ப வசதி களை ஆராய்ந்து வருகிறோம். வெளிநாட்டுப் பயணங்களுக்கு கடவுச் சீட்டுகள் தேவைப்படும்," என்று அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!