கச்சத்தீவு விழா: சசிகலாவுக்கு முதல் வெளிநாட்டு அங்கீகாரம்

சென்னை: அதிமுக பொதுச்செய லராக சசிகலா நடராஜன் பொறுப் பேற்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் ரீதியில் அனைத்துலக அளவில் அவருக் கான முதல் அங்கீகாரம் கிடைத்தி ருப்பதாக தமிழக அரசியல் கள ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கச்சத்தீவில் புதிய தேவாலய திறப்பு விழாவில் தமிழக மீனவர் கள் நூறு பேர் பங்கேற்க அனுமதி கிடைக்க, சசிகலா மேற்கொண்ட முயற்சியே காரணம் எனக் கூறப்படுகிறது. அந்த விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களை அனுமதிக்க இயலாது என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி துக்கம் விசாரிக்க சென்னை வந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சசிகலாவை கடந்த 7ஆம் தேதி சந்தித்தார். அப்போது, கச்சத்தீவு தேவா லயத் திறப்பு விழாவில் பங்கேற்க, குறைந்தது நூறு தமிழக மீனவர்க ளையாவது அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தினார். தமது கோரிக்கையை இலங்கை அதிபரிடம் எடுத்துரைக்க வேண் டும் என்றும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் சசிகலா கேட் டுக் கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இலங்கை திரும் பிய பின், அந்நாட்டு அதிபரிடம் இது தொடர்பாக பேசி, தமிழக மீனவர்கள் நூறு பேர் தேவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளார் ஆறுமுகம் தொண்டமான். இது குறித்து இந்திய அதிபருக் கும், சசிகலாவுக்கும் இலங்கை அரசு கடிதம் அனுப்பி விவரம் தெரிவித்துள்ளது. அந்தக் கடிதம் முதல்வர் பன்னீர்செல்வம் மூலமாக சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது. "இதன் மூலம் அனைத்துலக அளவில், அரசியில் ரீதியாக முதல் அங்கீகாரத்தைப் பெற்றுள் ளார் சசிகலா. இரங்கல் தெரிவிக்க வந்த இலங்கை அமைச்சரிடம், தமிழக மீனவர்களின் விருப்பம் குறித்து தெரிவித்து, அதைச் சாத் தியமாக்கியது பாராட்டுக்குரியது," என அதிமுக நிர்வாகிகள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!