இரு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கைது

பெங்களூரு: செல்லாத பழைய நோட்டுகளைச் சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்து உதவிய மேலும் இரண்டு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். இன்னும் அதிகமான ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட் டிருக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்போது கைதாகி உள்ள சதானடா நைகா, ஏ.கே. கெவின் ஆகிய இருவரும் அரசாங்கம் பரிந்துரைத்துள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு வங்கியில் இருந்து எடுக்கும் ரூ.4,000 என்ற அள வைக் காட்டிலும் கூடுதலாக பழைய பணத்தை புதிதாக மாற் றித் தந்துள்ளனர் என்றும் பெங்களூரு ரிசர்வ் வங்கிக் கிளை யில் பணிபுரிந்த இவர்கள் கமிஷ னுக்கு ஆசைப்பட்டு இந்தச் செய லில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் சிபிஐ அதிகாரிகள் கூறினர்.

செல்லாத ரூபாய் நோட்டு அறி விப்புக்குப் பின், கறுப்புப் பண பதுக்கல், முறைகேட்டில் ஈடுபடு வோருக்கு எதிராக சிபிஐ, வரு மான வரித்துறை அதிகாரிகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!