வங்கியில் ஒரு கோடி; அதிர்ச்சியில் கூலித் தொழிலாளி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவின் கிதியா கிளையில் ஒரு கோடி டெபாசிட் செய்யதுள்ளதாக கூலித் தொழிலாளி விஸ்வகர்மாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் நோட்டீசில் என்ன இருந்தது என்பது விஸ்வா விற்குப் புரியவில்லை. பின்னர் ஆசிரியர் ஒருவர் இதுகுறித்து விளக்கியுள்ளார். அந்த நோட்டீசில், "நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து நவம்பர் 17ஆம் தேதிக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,00,10,000 டெபாசிட் ஆகியுள்ளது. பான் கார்டும் சமர்பிக்கப்படவில்லை. எனவே வருமான வரித்துறையிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நோட்டீசைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஸ்வா பதறி அடித்துக்கொண்டு வங்கிக்குச் சென்று புகார் அளித்தார். வங்கிக் கணக்கை அதிகாரிகள் ஆய்வு செய் துள்ளனர். விஸ்வா நவம்பர் மாதம் ரூ.10,000 டெபாசிட் செய்துள்ளார். வங்கி அதிகாரி அதை Rs. 1,00,10,000 எனத் தவறாகக் பதிவு செய்துள்ளார். விஸ்வகர்மா 20 பழைய ரூ.500 நோட்டுகள் டெபாசிட் செய்துள்ளார். ஆனால் ஊழியர், தவறுதலாக 20,000 பழைய ரூ.500 நோட்டை டெபாசிட் செய்ததாக கணக் கிட்டுள்ளார். விஸ்வகர்மா எங்களை அணுகிய பிறகு இந்தத் தவறு கண்டுபிடிக்கப் பட்டு, வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என வங்கி மேலாளர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!