72 பேருக்கு ஒரே இடத்தில் இலவசத் திருமணம்

நொய்டா விளையாட்டரங்கில் 72 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தை பாரத் விகாஸ் பரிசாத் என்பவர் நடத்தி வைத்தார். இந்தத் திருமணத் தம்பதிகள் அனைவரும் வசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு முன்தினம் அன்று மணப்பெண்கள் மருதாணி போட்டுக்கொண்டனர்.

மற்ற பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. ரூ.90,000 மதிப்புடைய சாப்பாட்டுப் பாத்திரங்கள், போர்வைகள், காற்றாடி, தொலைக்காட்சி, மெத்தைகள், மரச் சாமான்கள், தங்கத் தாலி ஆகிய அனைத்துப் பொருட்களும் மணமக்களுக்குத் திருமண அன்பளிப் பாக வழங்கப்பட்டது. இதன்மூலம் மணமக்கள் எளிதாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று இந்தத் திருமணங்களை நடத்திய ஏற்பாட்டாளர் கூறினார். 72 தம்பதிகளில் 12 தம்பதிகள் பீகாரையும் மற்றவர்கள் டெல்லியையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!