ஆரோக்கியமான அரசியலுக்கு வித்திட்டுள்ள அதிமுக: பாராட்டுகிறார் தமிழிசை

மதுரை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி யின் உடல்நலம் குறித்து அதிமுக சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை விசாரித் தது, தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கு வழி ஏற்படுத்தி உள்ளது என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி சூழலால், வர்தா புயல் நிவாரணப்பணி சரி வர நடக்கவில்லை என்றார். "வர்தா புயலால் சென்னையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இன் னும் நிலைமை சீரடையவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர்.

"புயல் தாக்கத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதும், மீட்பு பணிகளும் அதிமுகவின் உள்கட்சி சூழலால் சீராக நடக்கவில்லையோ? என்ற எண்ணம் எழுந்துள்ளது. விரை வில் இந்நிலையை சீராக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் தமிழிசை. திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் தேறி மீண் டும் அரசியல் பணிக்கு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா மறைவையொட்டி பாஜ மறைமுக மாக தமிழகத்தில் அரசியல் செய் வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!