பயங்கரவாதிகள் நால்வர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: பதான்கோட் விமானப் படைத் தளத்தின் மீது பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக அசாரின் சகோதரர் அப்துல் ரவுப் அஸ்கர், ஷாஹித் லதிப், காசிப் ஜன் ஆகிய நால்வர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டத் தின் கீழ் ஆயுதங்கள் சட்டம், வெடிபொருட்கள் சட்டம், பொது சொத்துக்குச் சேதம் விளைவிப்பது ஆகிய சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படை தளத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி புகுந்த 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த மோத லில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!