முதல்வர், அமைச்சர் வீடுகளின் முன் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமாக மத்திய, மாநில அரசுகள் சட்டவிதிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறி விவசாயி கள் போராட்டம் நடத்துகின்றனர். அமிர்தசரசில் மத்திய அமைச்சர் பிக்ராம் சிங் மஜித்தியா வசிப்பிடத்தின் முன்பு போராட்டம் நடத்த அணிவகுத்துச் செல்லும் விவசாயிகளைப் போலிசார் தடுத்து நிறுத்துகின்றனர். தாங்கள் வாங்கிய விவசாயக் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்திய பஞ்சாப் விவசாயிகள், "விவசாயிகளும் தொழிலாளர்களும் கட்டமுடியாமல் திணறும் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்," என்று முழங்கினர். 13 விவசாய சங்கத்தினர்கள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகளின் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!