வியப்பூட்டும் இந்திய எம்.பி.; நாடாளுமன்றம் முடங்கினால் ஊதியத்தைத் திருப்பித் தருகிறார்

அண்மைய சில ஆண்டுகளாக இந்திய நாடாளுமன்ற அவைகள் கூடும்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதும் அதனால் அவைகள் செயல்படாமல் முடங்கு வதும் வழக்கமாகிப் போய்விட்டது. இப்போதுகூட இந்திய அரசின் செல்லா நோட்டு அறிவிப்புத் தொடர்பில் விவாதம் நடத்தவேண் டும் எனக் கூறி எதிர்க்கட்சி எம். பி.க்கள் தினமும் அமளியில் ஈடு பட்டதால் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் முழுவது மாக முடங்கியது.

இதனால் நாள்தோறும் அரசாங் கத்திற்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் அதுபற்றி எந்த எம்.பி.யும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், அப்படி ஓர் எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள் ளுங்கள் என்று சொல்லும்படியாக நடந்துகொண்டு முன்னுதாரண மாகத் திகழ்ந்து வருகிறார் ஒடிசா மாநில எம்.பி.யான பைஜெயந்த் ஜே.பாண்டா (படம்). பிஜு ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இவர் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிவிட்டால் அந்த நாளுக்குரிய ஊதியத்தையும் அரசாங்கத்திடமே திரும்பக் கொடுத்து விடுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!