வர்தா புயலால் 28,000 ஹெக்டேர் அளவு பயிர்ச்சேதம்

சென்னை: வர்தா புயல் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 28 ஆயிரம் ஹெக்டேர் அளவு பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். புயலால் வீசிய சூறாவளிக் காற்று, கனமழை காரணமாக 24 பேர் பலியானது கணக்கெடுப்பின் வழி தெரியவந்துள்ளதாக அவர் நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசுகையில் கூறினார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்ட அவர், மொத்தம் 70 ஆயிரம் குடிசைகள் முழுவதுமா கவும் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

"529 மாடுகள், 291 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் புயலால் உயிரிழந்துள்ளன. புயல் முன்னெச் சரிக்கையாக 104 முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டு, அவர் களுக்கு உணவு வழங்கப்பட்டது. "புயல் பாதித்த மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது," என்றார் அமைச்சர் உதயகுமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!