மருத்துவக் கழிவைக் கொட்டியவரின் மேல் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கேரளாவில் இருந்து கொண்டுவந்து கோவையில் மருத்துவக் கழிவுகளைக் குவித்தவர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவர் கேரளாவில் இருந்து பல்வேறு வகையான மருத்துவம், தொழிற்சாலை, தோல் கழிவு, பிளாஸ்டிக், பாட்டில் போன்றவற்றைக் கோவை எட்டிமடை பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் குவித்து வந்தார்.

500 டன்னிற்கும் அதிகமான அபாய கழிவுகளால் அந்தப் பகுதியில் மாசு ஏற்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் கழிவு களுடன் வந்த 23 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகமது இலியாசை கந்தேக வுண்டன்சாவடி காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவின் படி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் முகமது இலியாஸ் அடைக்கப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!