ரஜினி மனைவி நடத்தும் பள்ளி ஊழியர்கள் திடீர் போராட்டம்

சென்னை: நடிகர் ரஜினியின் மனைவி லதா நடத்தும் பள்ளியை முற்றுகையிட்டு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 'ஆசிரமம்' என்ற பெயருடைய அப்பள்ளி கிண்டி பகுதியில் உள்ளது. இங்கு 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 75 ஆசிரியர்கள், 26 வாகன ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், ஊழியர்களுக்கு பள்ளி நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை முறையிட்டும் பலனில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்காமலும் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!