தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்கும் நல்ல முயற்சி

திருப்பூர்: பள்ளிக் குழந்தைகள் கூட எந்நேரமும் கைபேசியை வைத்து விளையாடிக் கொண்டிருக் கும் சூழ்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நல்ல முயற்சி சத்தமின்றி திருப்பூரில் நடந்து வருகிறது. நத்தக்காடையூரில் சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில் மொத் தம் 127 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிகள் நடத்து வது சிறந்த வணிகமாக மாறிவிட்ட நிலையில், இந்தப் பள்ளியின் மாணவர் சேர்க்கை இயல்பாகவே குறைந்து போனது.

இதையடுத்து இப்பள்ளி நிர்வா கம் சில நடவடிக்கைகளை மேற் கொண்டது. மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத் தருவதோடு, தமிழர்களின் பண்டைய கலா சாரம், விளையாட்டு, இன்றைய நவீன கால வளர்ச்சிகள் குறித்து கற்றுத்தரும் முயற்சியில் ஆசிரியர் கள் ஈடுபட்டுள்ளனர். "தமிழர் பாரம்பரிய விளையாட்டு கள், விளையாடுவோரின் சிந்திக் கும் ஆற்றலையும் அறிவாற்றலை யும் உயர்த்தக்கூடியது. ஆனால், நவீன விளையாட்டுகளின் வர வால், அவை அழியத் தொடங்கின. அவற்றை மீட்டெடுத்து, ஆசிரியர் கள் அந்த விளையாட்டுகளின் சிறப்பை மாணவர்களுக்குப் புரிய வைத்துள்ளனர்.

குலை குலையா முந்திரிக்கா விளையாட்டில் பங்கேற்று விளையாடும் சிறுமிகள். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!