போராட்டம் திசை மாறுகிறது என்கிறார் ‘ஹிப் ஹாப்’ ஆதி

சென்னை: ஜல்லிக்கட்டு போராட் டம் திசைமாறிச் செல்வதாக 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போராட்டக்காரர்களில் ஒரு தரப்பி னரின் செயல்பாடு தமது மனதை வெகுவாகப் புண்படுத்திவிட்ட தாகக் குறிப்பிட்டுள்ளார். "கோயம்புத்தூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாள் முழுக்க இருந்தீர்கள். திடீரென ஏன் கிளம்பினீர்கள்? ஏதேனும் அழுத்தமா என்று சிலர் கேட்கி றார்கள். எந்த ஒரு அழுத்தமும் இல்லை. பயந்துவிட்டீர்களா? என சிலர் கேட்டீர்கள். நான் பயந்து அங்கிருந்து செல்லவில்லை. மனம் புண்பட்டு அங்கிருந்து கிளம்பினேன். அதுதான் உண்மை," என்று ஆதி கூறி உள்ளார்.

கோவையில் ஜல்லிக்கட்டுக் கான போராட்டம் என்பது திசை மாறியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒருசிலர் தேசியக் கொடியை மிதித்தது வருத்தம் தந்ததாகத் தெரிவித்துள்ளார். எப்போதுமே தேச விரோத செயலுக்குத் தம்மால் துணை நிற்க முடியாது என்றும், இந்து, முஸ்லிம் பிரச்சினையைப் பற்றி சிலர் பேசுவதை ஏற்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "பத்து ஆண்டுகளாக நீடித்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் சரியாக கொண்டு போய் கொண்டிருந்தனர். அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறு துணையாக உள்ளனர். திடீரென அங்கு ஒரு கூட்டம் முளைக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!