சென்னை: மெரினா கடற்கரையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையின் பல் வேறு பகுதிகளில் மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் போக்கு வரத்து அடியோடு நிலைகுத்தியது. திருவல்லிக்கேணி, மைலாப் பூர், பட்டினப்பாக்கம், நுங்கம்பாக் கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் வாகனங்கள் சாலைகளில் மணிக்கணக்கில் ஊர்ந்து சென்றன. வாகனமோட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
பழைய மகாபலிபுரம் சாலையில் போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாக னங்கள் முடங்கின. பல மணி நேரம் இந்த மறியல் நீடித்தது. தரமணி பகுதியில் நடந்த போராட்டத்தில் பள்ளி மாணவர்க ளும் பங்கேற்று காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். சென்னையின் முக்கிய சாலைக ளில் நேற்று இரவு வரை வாகனங் கள் அங்குலம் அங்குலமாகவே நகர முடிந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட் டது. இதனால் அலுவலகம், பள்ளி, தனிப்பட்ட பணிகளுக்காக வெளியே சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
பழைய மகாபலிபுரம் சாலையில் 25 கிலோ மீட்டர் தூரம் நிலைகுத்திய போக்குவரத்து. படம்: சதீஷ்