சமயத் தலைவரிடம் விசாரணை; ஜகார்த்தாவில் ஆர்ப்பாட்டம்

ஜகார்த்தா: இஸ்லாம் தற்காப் பாளர்கள் முன்னணி எனும் அமைப்பின் தலைவர் ஹபீப் ரிஸியெக் ‌ஷிகாபிடம் இந்தோனீசிய போலிசார் விசாரணை மேற் கொண்டதை எதிர்த்து அந்த அமைப்பு மற்றும் பிற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் ஜகார்த்தாவில் நேற்று பேரணி நடத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர். சமய நிந்தனை, இந்தோனீசிய தேசிய சின்னங்களை அவமதித்தது போன்ற பல்வேறு குற்றச் சாட்டுகளின் தொடர்பில் ஜகார்த்தா போலிஸ் தலைமையகத் தில் திரு ‌ஷிகாபிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரு ‌ஷிகாபுக்கு ஆதரவாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் அல் அசார் பள்ளிவாசலில் இருந்து போலிஸ் தலைமையகம் வரை ஊர்வலமாக வந்தனர். கிட்டத்தட்ட 2.5 கி.மீ. நீளத்திற்கு அந்தப் பேரணி நீண்டிருந்தது. ஜகார்த்தா ஆளுநர் அஹோக்குக்கு எதிராகக் கடந்த ஆண்டு பல போராட்டங்களை நடத்தியதன் மூலம் திரு ‌ஷிகாப் பிரபலமானார்.

அந்தப் பேரணியில் பங்கேற்ற வர்களில் ஒருவரான இஸ்லாமிய இயக்கக் கூட்டணியின் அசெப் சியாரிஃபுதீன் கூறுகையில், "குற்றம் சாட்டப்படும் சமயத் தலைவர்களை நாங்கள் ஆதரிப்போம். யாரும் அவர்கள் மீது குற்றஞ்சாட்ட விடமாட்டோம்," என்றார். கிட்டத்தட்ட 2,000 பேர் இந்த எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றதாக ஜகார்த்தா போலிஸ் பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் சொன்னார். அவர் களில் சிலர் பின்னிரவு 1 மணிக்கே அல் அசார் பள்ளி வாசலுக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. திரு ‌ஷிகாப் மீது சந்தேகம் கொண்டு, போலிசும் வழக்கறிஞர் களும் அவர் மீது அதிகாரபூர்வமாக குற்றம் சுமத்தக்கூடும் என்று அண்மைய நாட்களாக அனு மானிக்கப்பட்டு வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!