‘2019 தேர்தலுக்கு முன்பாகவே 2,000 ரூபாயும் செல்லாமல் போகலாம்’

ஹைதராபாத்: அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டும் செல்லாமல் போய்விடுமா என்ற கேள்விக்கு இதற்கான வாய்ப்பு சாத்தியமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016, நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அரசாங்கம் திடீரென்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவராக நம்பப்படும் அனில் போக்கில் என்பவர், இந்தப் புதிய 2,000 ரூபாய் நோட்டும் செல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அப்படி செல்லாமல் போகும் வாய்ப்பும் நீண்ட தொலைதூரத்தில் இல்லை என்றும் விரைவிலேயே அந்த நேரம் வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ரூ.1,000 நோட்டு செல்லாமல் போன தருணத்தில் அதற்குப் பதிலாக ரூ.2,000 நோட்டு அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தப் புதிய 2,000 ரூபாய் நோட்டும் அடுத்த தேர்தலுக்கு முன்பாகவே செல்லாமல் போகும் வாய்ப்பு ஏற்படலாம் என்று அனில் போக்கில் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!