கைப்பற்றப்பட்ட கவச வாகனங்கள் சிங்கப்பூர் திரும்பும்

ஹாங்காங்கில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான ஒன் பது கவச வாகனங்கள் சிங்கப்பூர் திரும்புகின்றன. இதனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் வெளி யுறவு அமைச்சு தெரிவித்தது. ஹாங்காங் அதிகாரிகள் தங்களுடைய விசாரணையை முடித்துவிட்டதாகவும் சிங்கப் பூரின் ராணுவ வாகனங்களையும் சாதனங்களையும் விடுவிப்பதாக வும் அறிக்கையில் அமைச்சு குறிப் பிட்டது. இந்த விவகாரத்தில் ஏற் பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் லீ சியன் லூங்கிடம் ஹாங்காங் தலைமை நிர்வாகி சிஒய் லியுங் தெரிவித்ததாகவும் அது கூறியது. "இது ஒரு ஆக்ககரமான முடிவு," என்றார் பிரதமர். தலைமை நிர்வாகி லியுங் குக்கு அனுப்பிய பதிலில் ஹாங் காங்கின் ஒத்துழைப்புக்குப் பிரதமர் லீ நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பரில் சிங்கப்பூருக்குச் சொந்தமான ஒன்பது கவச வாகனங்கள் ஹாங் காங் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டன.

தைவானில் நடைபெற்ற பயிற்சி களுக்குப் பிறகு 'ஏபிஎல்' என்ற சரக்குப் போக்குவரத்து நிறுவனம் ஒன்பது கவச வாகனங்களையும் ஹாங்காங் வழியாக சிங்கப் பூருக்குக் கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால் உரிமம் தொடர் பில் கவச வாகனங்கள் கைப்பற்றப் படுவதாக ஹாங்காங் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தைவானிலிருந்து சிங்கப்பூர் திரும்பியபோது ஹாங்காங்கில் அதிகாரி களால் கைப்பற்றப்பட்ட சிங்கப்பூரின் ஒன்பது கவச வாகனங்கள். கோப்புப் படம்: ஃபாக்ட்வயர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!