‘கம்பாலா’ போட்டிவேண்டும் என கர்நாடகா கோரிக்கை

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக் கட்டு விளையாட்டுக்கு சட்ட பூர்வ அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து பக்கத்து மாநிலமான கர்நாடாகாவிலும் அறுவடைக்குப் பிந்திய விளையாட்டான 'கம் பாலா' எனும் எருமை பந்தயத் துக்கு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றம் கம்பாலா விளை யாட்டுக்குத் தடை விதித்தது. தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது. இந்த நிலையில் கர் நாடகாவினரும் 'கம்பாலா' போட்டிக்குத் தடையை நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தக் கோரிக்கையை மாநிலத்தின் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆதரிக் கிறது. இந்த விவகாரத்தில் உட னடியாகத் தலையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சியை மற்ற கட்சியினரும் வலியுறுத்தி வரு கின்றனர். இதற்கிடையே இம் மாதம் 28ஆம் தேதி ஆர்ப்பாட் டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கம்பாலா எருமை பந்தயப் போட்டி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!