காவல்துறையினரே வாகனங்களுக்குத் தீ வைத்தனர்; காணொளியால் பரபரப்பு

சென்னை: மெரினா கலவரத்தின் போது காவல்துறையினரே வாக னங்களுக்குத் தீ வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங் களில் வெளியான காணொளித் தொகுப்புகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண் காவலர் ஒருவர் ஆட்டோவுக்குத் தீ வைப்பது, காவலர் ஒருவர் எரிந்து கொண்டிருக்கும் பொருள் ஒன்றை ஒரு வாகனத்திற்குள் வீசி எறிவது போன்ற காட்சிகள் அந்தக் காணொளித் தொகுப்புகளில் பதிவாகி உள்ளன. மேலும் போராட்டக்காரர்களை கண்மூடித்தனமாக போலிசார் தாக்கும் புகைப்படங்கள் சிலவும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இவற்றின் நம்பகத் தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும், காவல்துறை யினர் அத்துமீறிச் செயல்பட்டதா கவே தமிழக ஊடகங்கள் பல தெரிவிக்கின்றன. " போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவல்துறை யினரே திட்டமிட்டு கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர். இதை ஏற்க முடியாது," என ஒருதரப்பினர் சாடுகின்றனர். இதற்கிடையே, சென்னையில் நடந்த அசம்பாவிதங்கள் குறித்து நீதி விசாரணை தேவை என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதே கோரிக்கையை மேலும் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!