பீட்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: வழக்கறிஞர் ஒருவர் பீட்டா அமைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். அந்த அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சூரியபிரகாசம் என்ற அவர், தமது இந்த கோரிக்கையை அவ சர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் இதற்கு மறுத்துவிட்டது. முன்னதாக பீட்டா அமைப் பைச் சேர்ந்த ராதா ராஜன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருக்கு எதிராகவும் சூரியபிரகாசம் நீதிமன்றத்தில் மனு அளித்தார். ராதா ராஜன், சுப்பிரமணியம் சுவாமி ஆகிய இருவரும் தமிழ்க் கலாசாரத்திற்கு எதிராகப் பேசி வருவதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார். ஆனால், சூரியபிரகாசத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அவரது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என்று கூறி, விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!