அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ல் ஜல்லிக்கட்டு; அலங்காநல்லூரில் இயல்பு நிலை திரும்பியது

மதுரை: வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அவனியாபுரம் ஊர் விழா குழுவினர் அறிவித் துள்ளனர். அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் பல நாட்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி யதையடுத்து, தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவனியாபுத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அ றி வி க் க ப் ப ட் டு ள் ள து . அவனியாபுரம் கிராம விழா குழுவினர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு, அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டது. இம்முறை நானூறுக்கும் மேற் பட்ட காளைகளும் முந்நூறுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களமிறங்க உள்ளனர். பிப்ரவரி 1ஆம் தேதி அலங்காநல்லூரிலும் பிப்ரவரி 2ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடை பெறும் என ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக் கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!