குடியரசு தினம்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு;

சென்னை: குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் மட்டும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம் போல் இந்த ஆண்டும் மெரினா கடற்கரை யில் குடியரசு தின விழாவை நடத்த மாநில அரசு சிறப்பான ஏற்பாடு களை செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்புக்காக கடற்கரை சாலையில் சில தினங்கள் ஒத்திகை நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட் டுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த போராட்டம் காரணமாக அந்த அணிவகுப்பு ஒத்திகை நேற்று முன்தினம் வரை நடக்கவில்லை. எனினும் மெரினாவில் கூடிய லட்சக்கணக்கான போராட்டக் காரர்கள் வெளியேற்றப்பட்டதால், நேற்று அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. "எந்தவித விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறை முனைப்பாக உள்ளது. போலிசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்," என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!