போலிஸ் அடக்குமுறை தாக்குதல் நடத்துவதாக டி.ராஜா குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் மீதான அடக்கு முறை தாக்குதலை தமிழக அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், போராட்டக்காரர் கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அண்மையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அவர்களுடைய போராட்டம் 8 நாட் களுக்கு நீடித்தது. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டும் கூட்டம் கலை யாததால் காவல்துறையினர் தடி யடி நடத்தினர்.

இதனால் வன்முறை வெடித் தது. போலிசாரும் வன்முறையாளர் களும் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது போலி சார் தாக்குதல் நடத்திய தாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அமைதி காப்பது என்ற பெயரில் போலிசார் மேற் கொண்ட நடவடிக்கை கண்டனத் துக்குரியது என்று டி. ராஜா தெரிவித்துள்ளார். "யாருடைய ஏவுதலின் பேரில் காவல்துறை இப்படிச் செயல்பட் டது? எங்களைப் பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆணை பிறப்பித்துதான் காவல் துறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது எனக் கருதுகிறோம்," என்று டி.ராஜா மேலும் சாடியுள்ளார். இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ்த் திரையுலகப் பிரமுகர்களும்கூட காவல்துறை நடத்திய தடியடிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!