மீன்சந்தை தீக்கிரையானது: போலிசை சாடும் மக்கள்

சென்னை: மெரினா கலவரத்தின் போது கடற்கரை அருகே அமைந் துள்ள நடுக்குப்பம் பகுதி மீன் சந்தை தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. இதற்கு காவல்துறையினரே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஒவ்வொரு வீடாக புகுந்து பெண்கள், முதியோர், குழந்தைகள் என போலிசார் கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் அம்மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மெரினாவில் போராட் டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக் கணக்கானோரை சென்னை காவல்துறையினர் வலுக்கட்டா யமாக வெளியேற்றியபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது தடியடியில் இருந்து தப்பிக்க போராட்டக்காரர்கள் பலர் நடுக்குப்பம் பகுதியில் நுழைந்து அங்கிருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதற்கிடையே போலிசார் மீது கற்களையும் தண்ணீர் போத்தல்க ளையும் வீசி சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப் பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!