கமல்: சுவாமிக்குப் பதில் சொல்லப்போவதில்லை

சென்னை: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமியின் அவ தூறு கருத்துகளுக்கு தாம் பதில் சொல்லப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன் றில், ஒரு மாநிலத்தின் முதல்வர் மக்களை ஏன் சந்திக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் கமலுக்கும் சுப்பிரமணி யம் சுவாமிக்கும் இடையேயான வார்த்தைப் போர் வலுத்து வருகி றது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்போரை பொறுக்கிகள் எனக் கடுமையாக விமர்சித்திருந் தார் சுவாமி.

இதற்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது பதிலடி கொடுத்த கமல், "நான் எங்கே பொறுக்க வேண்டும் என்று தெரிந்த பொறுக்கி. டெல்லியில் பொறுக்க மாட்டேன்," என்று காட்டத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பில் கருத்து ரைத்த கமல், போராட்டக்காரர்களை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தி ருக்க வேண்டும் என்றார். இதை யும் சுப்பிரமணியம் சுவாமி விமர்சிக்கத் தவறவில்லை. போராட்டக்காரர்களை முதல் வர் சந்திக்க வேண்டும் என சினி மாக்காரர் கமல் முட்டாள்தனமாகக் கூறுவதாக சுவாமி குறிப்பிட்டார். இதற்கும் கமலின் பதிலடி கிடைத்துள்ளது.

"முதல்வர் மக்களைச் சந்திக்க வேண்டும். காந்தியும் ஜூலியஸ் சீசரும் கூட மக்களிடம் பணிவா கத்தான் இருந்தனர். அப்படி இருக்கும் போது தமிழக முதல்வர் ஏன் மக்களைச் சந்திக்கக் கூடாது? "சுவாமியின் அவதூறுகளுக்கு பதில் சொல்வது இல்லை என்று முடிவு எடுத்துவிட்டேன். தமிழ் பொறுக்கிகள் இதை கையில் எடுக்கட்டும். "உங்களுடன் (தமிழர்கள்) காம ராஜர், அண்ணா, ராஜாஜி, என் தந்தை உள்பட பலரும் இருக் கிறார்கள். மோதி மிதித்து விடு பாப்பா," என்று கமல் (படம்) தமது டுவிட்டர் பதிவில் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார். அமைதி ஒரு பூடகமான சொல் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது பேசாதிருப்பதா? செயலற்றிருப் பதா? எனக் கேள்வி எழுப்பியுள் ளார். "தமிழில் எதை எழுதினாலும் அது நாட்டுக்கே பொருந்தும். உலகுக்கும். 'வெல் தமிழா'," என்று கமல் மேலும் குறிப்பிட்டு இருக்கிறார். சுவாமிக்குப் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!