ஜல்லிக்கட்டு அறவழிப்போராட்டத்திற்கு மார்க்கண்டேய கட்ஜூ பாராட்டு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்காக களமிறங்கி பல்வேறு போராட்டங் கள் நடத்திய தமிழக மக்களை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பாராட்டி உள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அறவழிப் போராட்டம் நாட்டுக்கே நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என தமது சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். "இந்தப் போராட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும் சாதி மத எல்லைகளைத் தகர்த்து துணிச்சலுடன் உறுதியாக அறவழியில் போராடினீர்கள்.

"ஒரு மாபெரும் இயக்கமாக, அனைவரும் பேதமில்லாமல் ஒருங்கிணைந்ததுதான் மிகப் பெரிய அம்சம். மிகப் பெரிய அறவழிப் போராட்டத்தை நடத்திக் காட்டி வெற்றியையும் கண்டுள்ளீர் கள்," என்று மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த இந்திய மக்களும் தமிழக மக்களிடம் பாடம் கற்பார் கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், தங்களது வளமான வாழ்க்கைக்கு எதிரான தடைகளைத் தகர்க்க இந்தியர்கள், தமிழக மக்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். "தமிழகத்தைப் பின்பற்றி கர் நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்கள் தங்கள் கலாசாரத்தில் ஒரு பகுதி யாக உள்ள எருது பந்தயம், கம் பாலா போட்டிகளை நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்," என கட்ஜூ வலியுறுத்தி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!