ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறை: தீ வைத்த போலிஸ்காரர்களை உடனடியாக நீக்க வேண்டும்

சென்னை: கடந்த திங்கட்கிழமை நடுக்குப்பத்தில் நடைபெற்ற வன்முறையில் காவல் துறையினரே மீன் சந்தையைக் கொளுத்தினார்கள். வீட்டில் இருந்த பெண்கள் அனைவரையும் தாக்கி அடித்துள்ளனர். இதுதொடர்பாக பேராசிரியர் மார்க்ஸ், பேராசிரியர் மு.திரு மாவளவன், முனைவர் சிவக்குமார், வீ. சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ. கங்கா தரன், பேராசிரியர் கோ.கார்த்தி, அகமது ரிஸ்வான் ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு நேற்று நடுக்குப்பத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித் துப் பேசியது. அப்போது சேகரிக்கப்பட்ட உண் மை களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை உண்மை அறியும் குழு செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டது. 1984ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நடுக்குப்பம் பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்- குதலுக் குப் பிறகு இதுதான் இம் மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய காவல் துறை அத்துமீறல்.

காவல்துறையினர் மீது இப்- பகுதி மக்களுக்கு ஒருவிதப் பகை யும் கோபமும் இருந்ததாகத் துணை ஆணையர் கூறுகிறார். அது உண்மையோ பொய்யோ காவல் துறைக்கு இப்பகுதி அடித்- தள மக்களின் மீது ஒரு பகையும் கோபமும் இருப்பது இன்று அரங்- கேறியுள்ள கொடும் வன்முறை களில் வெளிச்சமாகியுள்ளது. போராட்டக்காரர்களுக்கு இம்- மக்கள் ஆதரவு காட்டியதையும் இவர்களால் ஏற்க முடியவில்லை. மெரினாவிலிருந்து காவல்துறை- யினரால் துரத்தப்பட்டு ஓடி வந்த ஒரு பெண் ஓடிக்கொண் டிருக்- கும்போதே கருச்சிதைவுக்கு ஆளாகியதையும் அவரை ரோட்டரி நகர் பெண்கள் காப்பாற்றியதையும் அவர்களில் ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!