மீனவர்களை மிரட்டும் காவல்துறை: வாசன் புகார்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட் டத்தில் இளைஞர்களுக்கு உதவிய மீனவர்களை காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், காவல்துறையின ரால் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் நடைபெற்ற அறவழிப் போராட்டத் தில் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று தங்களின் நியாயமான உணர்வு களைப் பிரதிபலித்ததாகக் குறிப் பிட்டுள்ள அவர், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது காவல் துறையினர் வன்முறையை ஏவியது நியாயமற்ற செயல் என கூறியுள்ளார். "மெரினா கடற்கரையில் நடை பெற்ற அமைதிப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற னர். இவர்களுக்கு அப்பகுதியில் வாழும் மீனவ சமுதாய மக்கள் உணவு, தண்ணீர் போன்ற அத்தி யாவசிய பொருட்களைக் கொடுத்து பேருதவியாக இருந்தனர். "போராட்டக்காரர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் இருந்ததை காவல்துறை அடையாளம் கண்டு அவர்களைத் தான் கைது செய்தி ருக்க வேண்டும். மாறாக மீனவர் களைக் கைது செய்தது, அவர்க ளது கடைகளை அடித்து நொறுக் கி யது, அவர்கள் மீது பொய் வழக்கு போட்டது ஏற்புடையதல்ல," என்று வாசன் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!