‘திமுக மீது வீண்பழி சுமத்துகிறார் பொன்.ராதா’

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் காரணமாக தமிழகத்தில் பாஜக வுக்கு அரசியல் ரீதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மனிதநேய மக் கள் கட்சித் தலைவர் ஜவாஹி ருல்லா தெரிவித்துள்ளார். இந்தச் சரிவை ஈடுகட்டுவ தற்காகவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக மீது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீண்பழி சுமத்துவதாக அவர் சாடியுள்ளார். "மதங்களைக் கடந்து தமிழர் கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஜல்லிக்கட்டுக்காக நடை பெற்ற போராட்டம் தமிழக அரசியலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது.

அதன் அரசியல் எதிர்காலம் அஸ்தமித்து விட்டது. இனி அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் எதிர்காலம் என்பது இல்லை. "எனவேதான் ஜல்லிக்கட்டு விவகாரத்தை வேறு வகையில் திசை திருப்புவதற்காக திமுகவின் மீது வீண்பழியை மத்திய அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன் சுமத் துகிறார்," என்றார் ஜவாஹிருல்லா. தமிழக மக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!