போராட்டத்தை சீர்குலைத்துள்ளது காவல்துறை: பிரகாஷ் காரத் புகார்

சென்னை: ஜல்லிக்கட்டுக்காகக் களமிறங்கிய மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை காவல்துறை திட்டமிட்டுச் சீர் குலைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டி உள்ளார். இந்த நோக்கத்தின் காரணமா கவே காவல்துறையினரே இறங்கி யுள்ளதாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

காவல் துறையினரின் வன் முறையால் பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப் பதாக கவலை தெரிவித்தார். சென்னையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் சந்தை உட்பட இதர பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மத் திய குழு உறுப்பினர்கள் சௌந்த ரராஜன், உ.வாசுகி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பிரகாஷ் காரத் படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!