திருமாவளவன்: தமிழக அரசை மிரட்டி உள்ளது மத்திய அரசு

சென்னை: ஜல்லிக்கட்டு விவகா ரத்தில் மத்திய அரசு தனது பாரத்தை மாநில அரசின் மீது ஏற்றிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தமிழக அரசை மிரட்டியும், நிர்பந்தித்துமே மத்திய அரசு பணிய வைத்துள்ளது என பகிரங்கமாகச் சாடினார். "பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுவாமி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற் காக தமிழர்களைக் கொச்சைப் படுத்திப் பேசி வருகிறார்.

பொறுக்கி என்றெல்லாம் கூறி வருகிறார். இது சரியானதல்ல. "குடியரசு தினத்துக்கான ஒத் திகை நடத்த, மெரினா கடற்கரைச் சாலை தேவை என்பதற்காகவே திட்டமிட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டத்தைக் கலைத் துள்ளது காவல்துறை. முதலில் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தைத் துவங்கியபோது அரசு அவர்களை அனுமதித்து விட்டு, அரசு விரும்பாதபோது விரட்டி அடித்து உள்ளது," என் றார் திருமாவளவன்.2017-01-28 07:00:00 +0800

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!