சென்னை: நடுக்குப்பத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த் துக் கொண்டிருந்த பிரேம் வெளியே இழுத்து வரப்பட்டுத் தெரு வில் போட்டு 15 போலிஸ்காரர்- களால் கட்டை யால் அடித்துத் தாக்கப்பட்டுள்ளார். பிரேமுடன், நிஷாந்த் என்ற இன்னொரு இளைஞரும் வீட்டில் இருந்ததால் அவருக்கும் அடி உதை. "எங்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் குண்டுக்கட்டாக எங்கோ தூக்கிச் சென்று அடித்து உதைத் தனர்," என்றார் பிரேம். 'சாவடி, அவனைச் சாவடி' என்று பெண் போலிசார் எட்டி எட்டி உதைத்தனர் என்றும் பிரேம் கூறினார்.
இதில் பலத்த காயமடைந்த பிரேம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தலை யில் 18 தையல்- கள் போடப்பட்டுள் ளன. நிஷாந்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுபோல் பல இளைஞர்களும் குழந்- தைக ளும் பெண்களும் தாக்கப்- பட்டுள்ள தால் நடுக்குப்பம் மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். திங்- கள் மற்றும் செவ் வாய்க்கிழமைக ளில் வீடு தோறும் சென்ற காவல் துறையினர் வீட்டிற்கொரு ஆண் காவல் நிலையத்- திற்கு வரவேண்டும் என்று மிரட்டிச் சென்றனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பெண் கள் வேலைக்குப் போன தங்களது கணவர்மார்களை வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறி வெளி- யிலேயே தங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.