முகிலன்: கொலை செய்ய முயன்றது காவல்துறை

தம்மைக் கொலை செய்ய முயன்ற தாக சமூக ஆர்வலர் முகிலன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஜல்லிக்கட்டுக்காகத் தாம் போராடியதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இக் கொலை முயற்சி குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட் சியரிடம் மனுவும் அளித்துள்ளார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந் தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் அண்மையில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற தொடர் போராட்டங் களில் பங்கேற்றார். குறிப்பாக அலங்காநல்லூரில் நடந்த போராட் டத்தில் முகிலன் தீவிர களப்பணி ஆற்றினார்.

இந்நிலையில் அலங்காநல்லூ ரில் போராட்டக்காரர்கள் மீது மதுரை காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து போராட் டக்காரர்கள் கலைந்தனர். இந்தத் தடியடி சம்பவத்தின் போது தம்மைத் திட்டமிட்டுக் கொலை செய்ய காவல்துறையினர் சதித்திட்டம் தீட்டியிருந்தனர் என்பதே முகிலனின் குற்றச்சாட்டு ஆகும். "போலிசார் சட்ட விதிகளை மீறி நடந்துள்ளனர். திட்டமிட்டுச் சதி செய்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். என் மீதான முன் விரோதத்தை மனதில் வைத்து, மதுரை காவல்துறை கண்காணிப்பாளர், அலங்காநல் லூர் பகுதி ஆய்வாளர் அன்னராஜ் உள்ளிட்ட போலிஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். "மேலும் என்னைத் தனியாக அழைத்துச் சென்று, 'உயிரோடு திரும்பமாட்டாய்' என மிரட்டினர். கலவரம் நடந்ததற்கு போலிசார் தான் காரணம்," என்று முகிலன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களின் வீடுகளுக் குச் சென்றும் காவல்துறையினர் மிரட்டி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!