மீனவர்களுக்கு உதவும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள்

சென்னை: வன்முறை, காவல்துறையின் தாக்குதல் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நடுக்குப்பம் பகுதி மீனவர் ளுக்குத் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின்போது சென்னை நடுக்குப்பத்தில் இயங்கி வந்த மீன் சந்தை முற்றிலுமாக எரித்து நாசமாக்கப்பட்டது. அப்பகுதி மீனவர்கள், அவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடந்தது. பல வாகனங்களும் குடிசை வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்நிலையில், நடுக்குப்பம் பகுதிக்குச் சென்ற தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் 25 பேர், மக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறினர். சம்பவத்தன்று நிகழ்ந்தவற்றைக் கேட்டறிந்த பின்னர் மீனவர்களுக்கு உதவுவ தாக உறுதியளித்தனர்.

"பாதிக்கப்பட்ட மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர்? அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்தால் சரியாக இருக்கும்? எனக் கண்டறிந்துள் ளோம். இம்மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம்," என ஊழியர்கள் பின்னர் தெரிவித்தனர். நடுக்குப்பம் மீன் சந்தையில் சுமார் 120 மீன் கடைகள் இருந் தன. இங்கு பெரும்பாலும் பெண் வியாபாரிகளே கடைகளை நடத்தி வந்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!