ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு இந்திய அதிபர் ஒப்புதல்

ஜல்லிக்கட்டுப் போட்டியை அனு மதிக்கும் தமிழக அரசின் சட்டத் திற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருப் பதாக ஊடகச் செய்திகள் தெரி வித்து ள்ளன. தமிழர்களின் கலாசாரத்தின் அடையாளமாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2015, 2016 ஆகிய ஈராண்டுகளாக பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாமற்போனது. மத்திய அரசின் விலங்கு நல வாரியத்தில் இடம் பெற்றுள்ள பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகள் வதை செய்யப்படு வதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கின.

அந்தத் தடையை நீக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எவ்வளவோ முயன்றும் முயற்சி கள் பலிக்கவில்லை. இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண் டும் என எழுந்த முழக்கங்களுக்குப் பதில் சொன்ன மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டவர்கள் அதற்கு ஏற்பாடு செய் வதாக உறுதி அளித்திருந்தனர். ஆயினும் பொங்கல் திருநாள் வரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தகவல் எதுவும் வெளியா காததால் தமிழகம் எங்கும் உள்ள இளையர்களும் மாணவர்களும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரம் மக்கள் ஆறு நாட்களுக்கு மேலாகக் கூடி ஜல்லிக்கட்டை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங் களுக்கும் அமைதிப் போராட்டம் பரவியது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக் கட்டை அனுமதிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றியது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் 23ஆம் தேதி மாலையில் நடை பெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது. பின்னர் மிருகவதைத் தடுப்புச் சட்டம்=2017 (தமிழ்நாடு திருத் தம்) அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய அரசு பரிந்துரை செய் ததன் பேரில் அந்தச் சட்டத்துக்கு அதிபர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக் கப்பட்டது. ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டம் மத்திய உள்துறை அமைச்சின் மூலம் தமிழக ஆளுநருக்கு நேற்று மாலை அனுப்பி வைக் கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து அச்சட்டம் தொடர் பான அறிவிக்கை வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட் டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நீடித்து வந்த தடை தற்காலிகமாக விலகி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!