இன்ஃபோசிஸ் மென்பொறியாளர் கொலையில் அசாமைச் சேர்ந்த காவலாளி கைது

புனே நகரின் இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி கைது செய்யப்பட்டு உள்ளார். கேரளாவைச் சேர்ந்த கணினிப் பொறியாளரான ரசிலா ராஜு, 25, என்னும் அந்தப் பெண், புனேவின் ஹிஞ்சேவாடி கணினி தொழிற் பூங்காவின் ஒன்பதாவது மாடியில் நேற்று முன்தினம் மாலை மாண்டு கிடக்கக் காணப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை வார விடு முறையிலும் ஓய்வெடுக்காமல் செய்து முடிக்க வேண்டிய பணி ஒன்றில் அந்தப் பெண் ஈடுபட்டு இருந்ததாகவும் பெங்களுருவில் உள்ள அலுவலகக் கிளையோடு அவர் அப்போது தொடர்பில் இருந் ததாகவும் புனே இன்ஃபோசிஸ் அலுவலகம் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை பின்னேரத் தில் திடீரென்று அவரது தொடர்பு கிடைக்காததால் பெங்களுரு கிளையின் அதிகாரி ரசிலாவின் நிலையைத் தெரிந்துகொள்ளுமாறு ஹிஞ்சேவாடி அலுவலகத்தைக் கேட்டுக்கொண்டார். ஊழியர்கள் சிலர் தேடிவந்த போது ரசிலா தாம் வேலை செய்துகொண்டிருந்த இடத்தி லேயே தரையில் சடலமாகக் கிடந்தார் என்றும் அவரது கழுத்து கணினி கம்பியால் இ-றுக்கப்பட்டு இருந்ததாகவும் போலிஸ் உதவி ஆணையர் வைஷாலி ஜாதேவ் தெரிவித்தார்.

மரணமுற்ற ரசிலா ராஜு, 25. படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!