சீமான்: எருது ஓட்டத்திற்காக கன்னடர்கள் போராடுவது மகிழ்ச்சி தருகிறது

சென்னை: கன்னடர்களின் பாரம் பரிய விளையாட்டான 'கம்பளா' எனப்படும் எருது ஓட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அம்மாநில மக்கள் போராடுவது மிகுந்த மனமகிழ்ச்சியையும் பெருத்த நம்பிக்கையையும் தருவ தாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கம்பளா விளையாட்டை மீட் கும் கன்னடர்களின் எழுச்சிமிகுப் போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தமிழர்களின் தைப் புரட்சியை அடியொற்றிய கன்னடர்களின் கம்பளா போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பல்வேறு மொழி வழி தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழும் ஓர் ஒன்றியமாக இந்தியா விளங்குவதாகக் கூறியுள்ளார்.

"இந்திய ஒன்றியத்தில் வாழும் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த பண்பாட்டு அடையாளங்க ளையும் தனக்கே உரிய பாரம்பரிய மரபுகளையும் நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகின்றன. "இவை அனைத்தையும் சிதைத்து அழித்து, தேசிய இனங் களின் உரிமைகளை எல்லாம் அடியோடு மறுத்து இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்க முயல் கிறது இந்துத்துவத் தலைமைப் பீடம். "அதற்கான முன்முயற்சியாக தேசிய இனங்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, அடையாளம், வரலாறு, விளை யாட்டு, மரபு என எல்லாவற்றையும் சிதைக்கின்ற வேலையினைத் தொடங்கி இருக்கிறது," என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!