தெரு நாய்களிடம் சிக்கித் தவித்த உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் இவைகளைக் கொல்ல வேண்டும் என்று பொது மக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தெரு நாய்களைக் கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மிருகவதைக்கு எதி ரான அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் தெரு நாய்களைக் கொல்வது நிறுத்தி வைக்கப் பட்டது. இந்தச் சூழ்நிலையில் தெரு நாய்களிடம் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரு உம்மன் சாண்டி சொந்த வேலை காரணமாக கோவைக்குச் சென்றுவிட்டு ரயில் மூலம் கோட் டயம் திரும்பினார்.

அப்போது தற்செயலாக அங்கு வந்த கோட்டயம் காங் கிரஸ் தலைவர் சிபிஜோன் தனது காரில் உம்மன்சாண்டியை அழைத்துச் சென்றார். பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு சாதாரண ஓட்டலுக்கு இருவரும் சாப்பிடுவதற்காகச் சென்றனர். ஆனால் ஓட்டல் அருகே அவர்கள் காரை நிறுத்தியதும் ஏராளமான தெரு நாய்கள் காரை சுற்றி வளைத்துக் கொண்டன. சில நாய்கள் காரின் மீது ஏறி குரைக்க தொடங்கின. அந்தக்காரில் குளிர்சாதன வசதி இல்லாத நிலையில் நாய்கள் மிரட்டியதால் இறக்கி விடப்பட்டிருந்த கார் கண்ணாடி கள் ஏற்றப்பட்டன. அப்போது அந்த வழியாக வந்த சிலர் தெரு நாய்களைக் கல்வீசி விரட்டியடித் தனர். அதன் பிறகுதான் காருக் குள் இருந்தது முன்னாள் முதல் வர் உம்மன் சாண்டி என்பது தெரிய வந்தது. தெரு நாய்களால் காருக்குள் சிறை வைக்கப்பட்ட தால் அதிர்ச்சியடைந்த உம்மன் சாண்டி, பொது மக்களிடம் நன்றி தெரிவித்த பிறகு அங் கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!